தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடித்து, வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் வாரிசு. இந்த படத்தை தெலுகு பட இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். தீபாவளி முதல் இந்த படத்தை குறித்தான அப்டேட்க்கள் வந்த வண்ணமே உள்ளது.
கடந்த வாரம் விஜய் பாடிய ரஞ்சிதமே பாடல் வெளியாகி உலக அளவில் ட்ரெண்ட் ஆனது, இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சம் தொட்டது.இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தான கேள்விகள் ரசிகர்களிடம் ஆங்காங்கே எழுந்தது. விஜயின் முந்தைய படமான பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தாத நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகியது. ஆகையால் வாரிசு படத்தின் இசை வெளியீடடு எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு ட்ரெண்ட் செய்து வந்த நிலையில் தற்போது அதுகுறித்தான தகவல்கள் கசிந்து வருகிறது.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது. மிக பிரமாண்டமாக நடக்கவிருக்கும் இந்த இசை வெளியீட்டு விழா குறித்தான அதிகார்வபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது
மேலும் விஜய்க்கு போட்டியாக கருதப்படும் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு படமும் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கபட்டுள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் தங்களின் விருப்பமான நடிகர்களின் படத்தின் அப்டேட்களுக்கு ஆவலாக காத்திருக்கின்றனர்.