நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தி படப்பிடிப்புகள் நிறைவடைந்து வரும் பொங்கலுக்கு அப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்படத்தில் விஜய் இருக்கும் போட்டோக்கள் வெளியாகி வைராலாகியுள்ளது.
தீபாவளி அன்று படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது,அதில் அடுத்த வாரம் முதல் வாரிசு படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வரும் என்று அறிவித்தனர்.இதையடுத்து தற்போது வாரிசு படத்தின் கெட்அப் பில் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளது. வெளியான போஸ்டர்களில் விஜய் இளமையாக இருக்கிறார் என்றும் வாரிசுதான் பொங்கலுக்கு வெற்றிபெறும் என்றும் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றனர். இதை தொடர்ந்து வாரிசு படத்தின் மற்ற அப்டேட்க்கள் வரிசியாக வரவுள்ளதாகவும் கூறபடுகிறது.
இந்நிலையில், வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தின் வியாபாரங்கள் வேகமாக நடைபெற்று வருவதாகவும்.அப்படத்தின் திரையரங்க உரிமத்தை பெற பல பெரிய தயாரிப்பு நிறுவங்கள் போட்டிபோடுவதாகவும் கூறப்படுகிறது.