பிரதமரும் உண்மை அறியாமல் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது, தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி எப்படியாவது பிளவுபடுத்த வேண்டும் என்று கனவு காண்கின்றார்கள் இந்த கனவு பழிக்காது – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
சென்னை ஆழ்வார்பேட்டையில் சென்னை காலநிலை செயல்பாட்டு குழு, ஆதரவின் வர்ணங்கள் என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்று கண்காட்சியை பார்வையிட்டார்.
பின் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
சென்னை காலநிலை செயற்பாட்டு குழு இந்த புகைப்பட கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்தி இருக்கிறார்கள், அதானித் துறைமுகம் தொடர்பான வெளிப்புறங்கள் மக்களிடையே கொண்டு செல்வது ஒரு நல்ல முயற்சி என்றும் இந்த பகுதி சார்ந்தும் அங்கு வாழக்கூடிய மக்கள் எத்தகைய வாழ்வாதாரத்தை வாழ்ந்துள்ளார்கள் என்கின்ற ஓவியங்கள் வைரலாக இங்கு உள்ளது..
அதானித் துறைமுகம் அந்த பகுதிக்கு வருமானால் அங்கு சுற்றி உள்ள கிராமங்கள் எத்தனை பாதிப்புகளை அடையும் என்று விளக்கக் கூடிய ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது.. இந்த கண்காட்சியை பார்க்கவந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே துறைமுகம் வேண்டாம் என்கின்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விழிப்புணர்வாக அமைந்துள்ளது.
விசிக முன்னிட்டு பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த திட்டம் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றோம். திமுக இந்த திட்டம் தேவையற்றது என்கின்ற எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மேலும் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒரு முறைக்கு இருமுறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது, ஆனாலும் அந்த திட்டம் முழுமையாக கைவிடவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது..
அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி என்று கூறியதை தொடர்ந்து மற்றொரு சாமியார் தகாத வார்த்தைகளில் கூறியதற்கு, இந்த மாதிரி உளறிக்கொண்டு இருக்கிறார்கள் இது போன்று தலையை வெட்டிவிட முடியாது, தாக்குதல் நடத்தி விட முடியாது, சனாதானம் ஒழிப்பு போராட்டம் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும், இது எந்த சமூகத்தினருக்கும் எதிரான கருத்து அல்ல
பிரதமரும் இது போன்ற பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது, தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி எப்படியாவது பிளவுபடுத்த வேண்டும் என்றும் கூட்டணிக்கு உள்ளே உள்ள கட்சிகளை உடைக்க வேண்டும் என்றும் அவர்கள் கனவு காண்கின்றார்கள் இந்த கனவு பழிக்காது
பாஜக சார்பில் நேற்று ஆளுநரை சந்தித்து மனு அழித்தது தொடர்பான கேள்விக்கு, பாஜக சார்பில் மனு கொடுத்தது தங்களை விளம்பரப்படுத்துவதற்காகவே, தமிழ்நாட்டில் அவர்களது அரசியல் விளம்பரம் பழிக்காது, வடநாட்டில் வேண்டுமென்றால் பழிக்கும் எனக் கூறினார்.