February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending அரசியல் தமிழ்நாடு

“ரஜினிக்கு துணிச்சல் இருக்கிறதா”? – விடுதலை சிறுத்தைகள் வன்னியரசு கேள்வி

சென்னை வண்ணராப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் இஸ்லாமியர்களை தாக்கிய போலீசாரை கண்டிக்க ரஜினிக்கு துணிச்சல் இருக்கிறதா?, என்று வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி நேற்று மாலை இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இப்போராட்டத்தில் சிஏஏவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டக்காரர்கள் மீது கொடூரமான முறையில் தக்குதல் நடத்தினர். இதில், பெண்கள் உட்பட பலர் காயமடைந்தனர்.

இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, “குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்துக்குள் போலீசார் புகுந்து தடியடி நடத்தியுள்ளனர். சனநாயகப்பூர்வமாக நடந்த போராட்டத்தை சீர்குலைத்து அச்சுறுத்தும் போக்கை காவல்துறை கைவிட வேண்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், போராடிய மக்கள் மீது தடியடி நடத்தியது அதிமுக அரசா? ஆர்.எஸ்.எஸ் அரசா? என்றும், இஸ்லாமியர்களுக்கு பாதிப்பென்றால் சும்மா இருக்க மாட்டேன் என்று சொன்ன ரஜினிகாந்த் அவர்களே, நேற்றைய இரவு இஸ்லாமியர் மீது நடத்திய போலீஸ் தடியடி உங்களுக்கு தெரியாதா/, போலீசை கண்டிக்க உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

காவல்துறையை ஏவி விட்டு தாக்குதல் நடத்துவது கடும் கண்டனத்துக்குரியது – மதிமுக தீர்மானம்

Digital Team

மாநிலங்களவையில் இருந்து வைகோ வெளிநடப்பு

Digital Team

மாநிலம் தழுவிய PUBG போட்டி; அதிர வைத்த மோசடி?

Digital Team

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி – கமல் வேதனை

Digital Team

இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு! : இலங்கை அமைச்சர் வலியுறுத்தல்

Digital Team

தங்கம் விலை உயர்வு …!

superadmin
You cannot copy content of this page
Madhimugam