வேளாங்கண்ணி மாதா கோவில் கொடியேற்றம் இன்று துவக்கம்.. இத்தனை சிறப்பு அம்சங்களா..?
நாகப்பட்டினம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாத பேராலய ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனால் வேளாங்கண்ணியே இன்று விழா கோலமாக காட்சி அளிக்கிறது.
ஆண்டு தோறும் இந்த மாதம் பேராலயத்தில் பெருவிழா நடத்தப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதியான இன்று தொடங்கவுள்ளது. இன்று முதல் இன்னும் 10 நாட்களுக்கு திருவிழா நடைபெறும்.
இந்த நாள்களில் தினந்தோறும் லட்சம்கணக்கான பக்தர்கள் பல நூறு கிமீ நடைபயணம் செய்து தங்களின் நேர்த்திக்கடனை செய்வது வழக்கம் அன்னை மாதாவின் அருளாசி வேண்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வருவது வழக்கம். கடந்த இரண்டுகளாக கொரோனா காரணத்தால் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டிற்கு பின் இந்த ஆண்டு திருவிழா நடைபெற இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்ள வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
இன்று மாலை 5:45 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆட்சியர் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் இந்த கொடியை புனிதம் செய்து வைக்கிறார். செப்டம்பர் 8ம் தேதி இரவு தங்கதேர் திருவிழா நடைபெறும். பக்தர்கள் கூட்டம் நிரம்பி வருவதால் 27 உயர் கண்காணிப்பு கோபுரம், 8 ட்ரோன் கேமராக்கள் , 760 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
20 லட்சம் மேலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக கூடுதலாக 450 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..