தொப்பி, தாடி வச்சிருந்தா தீவிரவாதியா? – வேல்முருகன் பாய்ச்சல்

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம், “குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்ப்பு பல்சமய பேரியக்கம்” சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்றது.

சிதம்பர நகர் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு, தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை துணைத்தலைவர் இமதாத்துல்லாஹ் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, சமூக செயற்பாட்டாளர் ஹென்றி திபேன், பாத்திமா பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

இதில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசுகையில், இந்த சட்டம் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சட்டம் மட்டுமல்ல. அடிப்படை அரசியல் அமைப்புக்கு எதிரான சட்டம். அடிப்படை அரசியல் அமைப்பை காப்பதற்காகவே இந்த போராட்டம்.

தொப்பி வைத்திருந்தாலும், தாடி வைத்திருந்தாலும் தீவிரவாதி என்று முடிவு செய்து, அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தினால் அவன் ஏன் தீவிரவாதியாக மாறமாட்டான்?. அமைதி வழியை விட்டு வேறு பாதைக்கு செல்ல மாட்டான்? என ஆவேசமாக பேசினார்.

What do you think?

கொரோனா வைரஸ் தேசிய பேரிடராக அறிவிப்பு!

கடத்தப்பட்ட மணமகள் இளமதி சேலம் மேட்டூர் காவல்நிலையத்தில் ஆஜர்!