‘வீடியோ கான்பரன்ஸ் கல்யாணம்’ கொரோனாவால் நிகழ்ந்த வினோதம்!

கொரோனா அச்சுறுத்தலால் மணமகன் வரமுடியாமல் போனதால் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இந்த கொடிய வைரஸால் தற்போது உலகளவில் 8,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அனைத்து நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்நிலையில், தெலுங்கானாவைச் சேர்ந்த ஷேக் அப்துல் நபி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகள் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் மணமகன் முகமது அத்னான் சவுதி அரேபியாவில் வேலை செய்கிறார்.இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான நிலையங்களில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவரால் திருமணத்திற்கு வரமுடியவில்லை.

இதனால் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த இரண்டு வீட்டாரும் முடிவு செய்து வித்தியாசமாக வீடியோ கான்பரன்ஸ் வழியாக திருமணத்தை நடத்தி முடித்தனர்.மேலும் திருமண சடங்குகள் அனைத்தும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த கொரோனா பிரச்சினைகள் முடிந்த பின்பு மணமகன் முகமது அத்னான் இந்தியாவுக்கு வந்து தனது திருமண வாழ்க்கையை தொடங்குவார் என்று தெரிகிறது.

What do you think?

‘இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்’ விஜய்யின் விக் குறித்து நடிகர் ஸ்ரீமன் மழுப்பலான பதில்!

‘சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா’ அமைச்சர் அதிர்ச்சி தகவல்!