மத்திய அரசை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…!!
தலித் கிறித்தவர்களை SC பட்டியலில் இணைக்க மத்திய அரசை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்….
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகில் தலித் கிறித்தவர்களை SC பட்டியலில் இணைக்க மத்திய அரசை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கருப்பு பேஜ் அணிந்து பங்கேற்றனர்.
பங்குத்தந்தை வட்டார அதிபர் சந்தன சகாயம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் கிறிஸ்தவர்கள் மத்திய அரசே வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.. மத்திய அரசே தலித் கிறிஸ்தவர்களை SC பட்டியலில் உடனடியாக சேர்த்திடு.
1950-ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆணையின் 3- ஆம் பிரிவை நீக்கிடு. தலித் கிறிஸ்தவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று. நீதி அரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்து சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் மக்களை பிரிக்காதே தலித் கிறிஸ்தவ மக்களை அட்டவணைப் பட்டியலில் சேர்த்திடு.
அரசியலமைப்பு சட்டத்தை மதித்திடு. மத சுதந்திரத்தை வழங்கிடு. உரிமையை பெறும் வரை போராடுவோம். தமிழக அரசே தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களை அட்டவணைப் பட்டியலில் சேர்த்திட, மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..