வேற லெவல் காம்போவுடன் ‘விஜய் 65’ – ரசிகர்கள் கொண்டாட்டம்

மாஸ்டர் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து நடிக்கவுள்ள அவரது 65-வது படம் குறித்த தகவல் வெளியாகி எதிர்ப்பார்ப்பை எகிற செய்துள்ளது.

கார்த்தி நடித்த கைதி படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ‘ஒரு குட்டி கதை’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் மாஸ்டர் படம் வெளியாகியுள்ள நிலையில், அவரின் அடுத்த படம் குறித்த தகவல் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘விஜய் 65’ படத்தை இயக்கப் போவது வெற்றிமாறன், பாண்டிராஜ் என்ற பேச்சு கோலிவுட்டில் நிலவி வந்தது. ஆனால் யாரும் எதிர்பாரத வண்ணம் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவிருப்பது சுதா கொங்கரா என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் மணிரத்னம் உதவியாளராக பணியாற்றி விட்டு, மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து தற்போது சூர்யாவை வைத்து ‘சூரரைப்போற்று’ படத்தை முடித்துள்ளார். ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சுதா கொங்கரா கூறிய கதை சன் பிக்சர்ஸுக்கு பிடித்துவிடவே, விஜய்யிடம் கதை சொல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர். விஜய்க்கும் அந்த கதை பிடித்துப் போகவே, ‘சூரரைப்போற்று’ படத்தை பார்த்துவிட்டு உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டாராம். மேலும், ‘விஜய் 65’ படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில், ஜி.வி,பிரகாஷ்குமாரையே விஜய் டிக் செய்துள்ளாராம். சன் பிக்சர்ஸ், விஜய், சுதா கொங்கரா, ஜி,வி என இப்போதே ‘விஜய் 65’ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை எகிற செய்துள்ளது.

What do you think?

ராஷ்மிகாவிற்கு ஷாக்கிங் முத்தம் கொடுத்த ரசிகர் – வைரல் வீடியோ

ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கட் விலை உயர்வு