‘ரசிகர்கள் வேண்டாம்’ விஜய் எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் மாஸ்டர். இதில் சாந்தனு,ஆண்ட்ரியா,மாளவிகா மோகனன் பலரும் நடிக்கின்றனர். அனிருத் இசையில் குட்டி ஸ்டோரி என்ற பாடல் மட்டும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது.

பொதுவாக தன் திரைப்படங்களின் இசைவெளியீட்டு விழாவில் அரசியல் பேசும் நடிகர் விஜய் மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவிலும் அரசியல் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு தனது ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் என்று விஜய் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின்போது ஏராளாமான ரசிகர்கள் குவிந்ததால் போலீசார் தடியடி நடித்தினர். இதனை தடுக்கும் வண்ணம் விஜய் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் 15ம் தேதி ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

What do you think?

இன்று மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

‘அமெரிக்காவையும் விட்டுவைக்காத கொரோனா’ 11 பேர் பலி!