குஷி படம்குறித்து விஜய் தேவர் கொண்டாவின் அசத்தல் பேட்டி..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!
கோவை அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள, உள்ள நட்சத்திர ஹோட்டலில் குஷி படத்தின் பிரமோஷனுக்காக கோவை வந்துள்ள அப்படத்தின் கதாநாயகன் விஜய் தேவர் கொண்டா செய்தியாளர்களை சந்தித்தார்
கோவை அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள, உள்ள நட்சத்திர ஹோட்டலில் குஷி படத்தின் பிரமோஷனுக்காக கோவை வந்துள்ள அப்படத்தின் கதாநாயகன் விஜய் தேவர் கொண்டா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில் இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது நானும் சமந்தாவும் இணைந்து நடிச்சோம் இது முற்றிலும் காதல் கதை சார்ந்த படமாக உருவாகியுள்ளது குறிப்பாக தமிழ் தெலுங்கு உள்பட தென்னிந்திய படங்களை பொறுத்தவரை எந்த ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை.
நடிகர் விஜய் நடித்த குஷி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆக அமைந்தது சமந்தாமை பொருத்தவரை மிகவும் அற்புதமான நடிகை நான் கல்லூரி படிக்கும்போது நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களை பார்த்துள்ளேன் பாகுபலி புஷ்பா கே ஜி எஃப் போன்ற மிகப் பெரிய படங்கள் குடும்பங்களுடன் வந்து பார்க்கக்கூடிய படமாக அமைந்துள்ளது.
அதேபோலத்தான் இந்த குஷி படமும் அமைந்துள்ளது தமிழக மக்கள் கண்டிப்பாக குஷி படத்தில் வரக்கூடிய பாடல்களை ரசிப்பார்கள் ராஷ்மிகாவுடன் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நிச்சயமாக ஸ்கிரிப்ட் இருந்தால் நடிக்க தயாராக உள்ளேன்.
அதே போல சமந்தாவுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க நான் தயாராக உள்ளேன் மாவீரன் படத்தை நேற்றைய தினம் பார்த்தேன் படம் மிகவும் அருமையாக இருந்தது பிடித்துள்ளது.
தமிழில் சிவகார்த்திகேயன் எனக்கு மிகவும் பிடித்த நபர் லோகேஷ் மற்றும் நெல்சன் ஆகிய இருவரும் சிறந்த இயக்குனர்கள் காலா கபாலி போன்ற படங்களின் கேமராமேன் முரளி இந்த படத்தில் எங்களுடன் இணைந்துள்ளார்.
அது மேலும் படத்திற்கு வழி சேர்க்கும் இசையமைப்பாளர் கேரளாவை சேர்ந்தவர், நான் இன்னமும் ஜெய்லர் திரைப்படத்தை பார்க்கவில்லை இருந்தாலும் படம் மிகவும் அருமையாக உள்ளது என்று கூறுகின்றனர் ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி வசூலை அள்ளியதாக தகவல்கள் கிடைத்துள்ளது என்றார்,
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..