February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending சினிமா

சோதனை நல்லது! – அஜித் வழியில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்ட வருமானவரித் துறையினர், அந்நிறுவனம் தயாரித்த பிகில் படத்தில் விஜய் நடித்திருந்ததால், அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். முதலில் அதிருப்தி தெரிவித்த விஜய் ரசிகர்கள் தற்போது சோதனை நல்லது என கொண்டாடி வருகின்றனர்.

முன்பு ஒருமுறை நடிகர் அஜித் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனையில், அவரது வீட்டில் தேட முடியாமல் இருந்த பொருட்கள் அனைத்தும் கிடைத்து விட்டதாக கூறியிருந்தார். அதேபோல் இப்போது விஜய் வீட்டிலும் காணமல் போன பொருட்கள் கிடைத்திருக்கும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், பிகில் படத்தின் வசூல் 300 கோடி என்ற உண்மையும், விஜய் வரி ஏய்ப்பில் ஈடுபடவில்லை என்பதும் நிரூபனமாகிவிட்டது என்று கொண்டாடி வருகின்றனர். இதில் கூடுதல் சுவாரஸ்யமாக ‘வசீகரா’ படத்தில் வடிவேலுவுடன் விஜய் நடித்த காமெடி காட்சி ஒன்றை பகிர்ந்து, வருமானவரித் துறையினரை அவரது ரசிகர்கள் மறைமுகமாக கேலி செய்துள்ளனர்.

Related posts

சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் கொரோனா வைரஸ் !

superadmin

கிரிக்கெட்டில் மட்டுமல்ல பானிபூரி செய்வதிலும் தோனி தல தான்!

Digital Team

காவல்துறையை ஏவி விட்டு தாக்குதல் நடத்துவது கடும் கண்டனத்துக்குரியது – மதிமுக தீர்மானம்

Digital Team

தங்கம் விலை நிலவரம்

Digital Team

குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு முறைகேடு – சிபிசிஐடி தீவிர விசாரணை

Digital Team

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்புடைய 4 பேரிடம் தீவிர விசாரணை – சிபிசிஐடி

Digital Team
You cannot copy content of this page
Madhimugam