கள்ளக்குறிச்சி விவகாரத்தால் கடுப்பான விஜய்..! டிவிட் பதிவு…! தமிழக அரசுக்கு வைத்த வேண்டுகோள்..?
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விற்ப்பனை செய்யப்பட்டட கள்ளச்சாரயத்தை குடித்த நுற்றுக்கும் மேற்ப்பட்டோர் வாந்தி,மயக்கம் ஏற்ப்பட்டு கடந்த புதன்கிழமை மருத்துவமயைில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 35 பேர் உயிரிழந்த நிலையில் என்பதுக்கும் மேற்ப்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அபயம் ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியாகியுள்ள இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
மேலும் பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்ததில் அதில் மெத்தனால் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டும் என்றும் இச்சம்பவம் குறித்து தமிழக அரசுக்கு வேண்டுக்கோள் விடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜயின் பதிவு:
”கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.
மேலும் இது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்னதாகவே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால்.. இன்று மீண்டும் இப்படி ஒரு துயர சம்பம் நடந்திருக்காது..
எனவே இந்த முறை இது சமந்தபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசிடம் கேட்டுகொள்கிறேன்..
என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜய் கேட்டுக்கொள்கிறேன்” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்