தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரையில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போது விஜய் மக்கள் இயக்கத்தினர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
நேற்று மதுரையில் நடைபெற்ற பாஜக பாதயாத்திரையில் விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்புத் தலைவர் சி.கே.பத்ரி சரவணன் முன்னிலையில் நிர்வாகிகள் பலரும் அண்ணாமலையின் பாதயாத்திரையில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சி.கே. பத்ரி, விஜய்யும் அண்ணாமலையும் அண்ணன் தம்பி தான். இருவரும் ஊழலை ஒழிக்க வேண்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். அரசியல் ரீதியாக இருவரும் ஒரே மாதிரிதான். விஜய் மூத்தவர், அண்ணாமலை இளையவர். இருவரும் மக்களுக்கு நல்லது சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். இருவரும் மக்களுக்கு நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். அப்படி இருக்க அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம். நல்ல விஷயத்தை யார் செய்தால் என்ன?இருவரும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதுதான் சரி. அண்ணாமலை இதைத்தான் சொல்கிறார். விஜய்யை அரசியலுக்கு அழைக்கிறோம். அவரும் வந்துவிடுவார்., என்று கூறினார். அவரின் இந்த பேச்சு கடும் விவாதங்களை ஏற்படுத்தியது.
இதுத் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கேள்வியை எழ வைத்துள்ளது.