Exclusive Today Trending சினிமா

“அதிரி புதிரியாக வெளியானது மாஸ்டரின் குட்டி ஸ்டோரி”

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படத்தின் சிங்கிள் டிராக் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க அனிருத் மாஸ்டர் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை சினிமா துறை மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மாஸ்டர் சிங்கிள் டிராக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

“Let me sing a kutty story pay attention listen to me” என விஜய்யின் குரலில் ஆரம்பிக்கும் இந்த பாடலானது, மெதுவாகவும் அதே நேரத்தில் துள்ளலான இசையுடனும் உள்ளது. ஆங்கிலம், சென்னை தமிழ் என கலந்து கட்டி சற்றே பெப்பியான குரலில் விஜய் பாடுவது கேட்பவர்களையும் சேர்ந்து ஆட்டம் போட வைக்கிறது. குறிப்பாக பாடலின் பின்னணி காட்சியமைப்புகளை வைத்து பார்க்கும் போது, விஜய் கல்லூரி பேராசிரியராக பணிபுரிவது போன்றும், மாணவர்களுக்கான தத்துவத்தையும் அறிவுரையையும் பாடலாக பாடுவது போன்று அமைந்துள்ளது. பாடலுக்கான இசையும் வகுப்பறையில் இருக்கும் மேஜைகளில் தாளம் போடுவது போன்று அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

திருச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

Digital Team

இந்தியா-இலங்கை குறித்த பேச்சுவார்த்தையில் மகிந்த ராஜபக்சே

Digital Team

தவறான தகவல் பரப்பியதால் சீமான் மீது வழக்குப்பதிவு!

Digital Team

பெட்ரோலிய, ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு வெளியிட்ட குறிப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

Digital Team

மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு !

superadmin

‘தசாவதாரம்’ கமலுக்கு சவால் விடும் ‘கோப்ரா’ விக்ரம்!!!

Digital Team
You cannot copy content of this page
Madhimugam