மாஸ்டர் படத்தில் விஜய்யின் பெயர் இதுவா?

மாஸ்டர் படத்தில் விஜய்யின் பெயர் என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார். அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஆண்டிரியா, சாந்தனு, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த படத்தில் விஜய்சேதுபதியின் பெயர் பவானி என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. தற்போது விஜய்யின் பெயர் என்ன என்பது தெரியவந்துள்ளது. இந்த படத்தின் போஸ்டரில் விஜய் ஐ.டி. கார்டு ஒன்று அணிந்துள்ளார். அதில் அவரது பெயர் ஜான் துரைராஜ் என்று உள்ளது. மேலும் அவர் பணிபுரியும் கல்லூரியின் பெயர் st.ஜெப்ரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்று உள்ளது.

மேலும் இப்படத்தில் விஜய்யின் பெயரால் ஜான் துரைராஜ் என்பதை சுருக்கி ஜேடி என்று தான் அழைப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

What do you think?

கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது! – 10 ரூபாய்க்கு காய்கறி விற்பனை

இந்தியன் 2 விபத்து – சங்கரிடம் விசாரணை