‘ரஜினியை முந்திய விஜய்’ மகிழ்ச்சியில் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்குபவர் விஜய் தான் என்று கூறி வருகின்றனர்.

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் மார்ச் 15ம் தேதி நடைபெறவுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர், அது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்றும் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

பின்பு வருமான வரித்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் நடிகர் விஜய் பிகில் படத்திற்காக 50 கோடியும், மாஸ்டர் படத்திற்காக 80 கோடியும் சம்பளம் பெற்றுள்ளதாகவும் இரண்டிற்கும் முறையாக வரிசெலுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

இந்த தகவலை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்குபவர் விஜய் தான் என்றும் ரஜினியை விஜய் முந்திவிட்டார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

‘பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்ற உலகின் முதல் கிரிக்கெட் போட்டி’

கொரோனாவால் மூடப்படும் பத்மநாபபுரம் அரண்மனை !