ரவுடிக்கு உதவிய ‘மாஸ்டர்’ வில்லன் – டிக்டாக் வைரல்

‘நானும் ரவுடிதான்’ படத்தில் ரவுடியாக நடித்த காமெடி நடிகரின் மருத்து செலவுக்கு நேரில் சென்று உதவிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆதித்யா சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்த லோகேஷ் பாபு ‘நானும் ரவுடிதான்’ படத்தில், விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார். அப்படத்தில் ரவுடி போன்ற மிரட்டல் கதாபாத்திரத்தில் வந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து காமெடி காட்சியில் நடித்து புகழ்பெற்றார்.

இந்நிலையில், அவர் பக்கவாத நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு உதவி தேவைப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள்கள் வைக்கப்பட்டன.

இதையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி லோகேஷ் பாபுவிற்கு உதவி செய்ததுடன், அவரை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இதனை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள லோகேஷின் குடும்பத்தினர், விஜய் சேதுபதிக்கு நன்றியும் கூறியுள்ளனர்.

மேலும், இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விஜய் சேதுபதியின் இந்த உதவியை நெட்டிசன்கள் பலரும் அவரை பாராட்டி வருவதோடு, லோகேஷ் பாபுவும் விரைவாக குணமடையே வேண்டும் என தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

What do you think?

செல்போனில் ஆபாச படம் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை – ஏடிஜிபி ரவி

‘தமிழிசையை பற்றி அவதூறு’ டிக்டாக் புகழ் மன்னை சாதிக் கைது !