February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending சினிமா தமிழ்நாடு

‘போயி வேற வேலை இருந்தா பாருங்கடா’ – விஜய் சேதுபதியின் கலக்கல் ட்வீட்

விஜய் சேதுபதி மதம் மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் வதந்திக்கு பதிலடி கொடுத்துள்ள அவர், ‘போயி வேலை இருந்தா பருங்கடா’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் வருமானவரித் துறை அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். மேலும், அவரது வீடுகளிலும், அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறப்பட்டு வந்த நிலையில், மற்றொரு தகவலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விஜய்க்கு நெருக்கமான கல்லூரி நிர்வாகத்தின் பெண் உரிமையாளர் ஒருவர், இந்துக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முயற்சி செய்து வருவதாகவும், இதில் விஜய், விஜய் சேதுபதி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் பரவின. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியும் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதால் இவ்வாறான செய்திகள் வந்துகொண்டே இருந்தன.

மேலும், விஜய் சேதுபதி மட்டுமின்றி ஆர்யாம் ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் ஏற்கனவே சிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும் செய்திகள் பரவின. இதனால்தான் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதாகவும் கூறப்பட்டன. இந்நிலையில், இதுகுறித்து பதிலடி கொடுத்துள்ள விஜய் சேதுபதி, “போயி வேலை இருந்தா பாருங்கடா” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய் சேதுபதியின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் வருகிறது.

Related posts

சிலிண்டர் விலை உயர்வு!

Digital Team

தத்துவக் கவிஞர் குடியரசுவுக்கு வைகோ மலர்தூவி மரியாதை

Digital Team

கெஜ்ரிவால் பதவியேற்பும் மோடியின் வாரணாசி பயணமும்!

Digital Team

கைலாசத்தை கட்டி முடித்து விட்ட்டேன் …!நித்யானந்தா

superadmin

ஆயிரத்தை கடந்தது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை !!!

Digital Team

சென்னை-மைசூருக்கு மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில்!!!

Digital Team
You cannot copy content of this page
Madhimugam