ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டி முத்தமிட்ட விஜய் சேதுபதி..!!
நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்ற செயலாளர் குமரனுக்கு புதிதாக பிறந்த குழந்தைக்கு அழகான ஒரு தமிழ் பெயரை சூட்டியும் தனது முத்தத்தையும் அன்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி அவர்கள் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர் ஆனால் தற்போது புகழின் உச்சியில் இருக்கிறார். இவர் தன்னுடைய ரசிகர்களிடம் ரொம்ப இயல்பாக பழகுவதை கண்டு தான் இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதுடன் பலருடைய ஃபேவரைட் ஆகி வருகிறார்.
இவருடைய நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தாலும் இவரில் எளிமையாக பழகும் குணமே இவரை அனைவருக்கும் பிடிக்க வைக்கிறது. விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் இவரிடம் ஸ்டாங்காக வாங்கும் ஒரு முத்தம் இவர்களின் அன்பை வெளிப்படுத்தி வருகிறது.
இக்காலக்கட்டத்தில் பலரும் கஷ்டப்படுவோருக்கு செய்யும் உதவிகளை வெளியில் தெரியப்படுத்தி வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் செய்யும் உதவியை வெளியில் தெரியப்படுத்துவது இல்லை. சமீபமாக இறந்த ஒரு இயக்குனரின் வீட்டில் இயக்குநனரின் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக விஜய் சேதுபதி அவர்கள் பணம் கொடுத்து உதவி இருக்கிறார் ஆனால் இயக்குனரின் குடும்பத்தில் இந்த உதவியை வெளியில் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார், ஆனால் இதுகுறித்து அந்த குடும்பம் பெருமையாக பேசியிருந்தனர்.
இதுபோல பலருக்கும் அவர்களின் மனதை நெகிழ்ச்சி அடைய வைப்பதுடன் இன்று தனது ரசிகர் மன்ற செயலாளர் குமரனுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், விஜய் சேதுபதி மருத்துவமனைக்கு நேரசியாக சென்று பார்த்தது மட்டுமின்றி அந்த அழகான ஆண் குழந்தைக்கு “கணியன்” என்ற அழகான பெயரை சூட்டி நெற்றியில் ஒரு முத்தத்தையும் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இச்செய்தியை சமூக வலைத்தளங்களில் பார்க்கும் அனைவரும் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.