“மாஸ்டருக்கு மாஸான முத்தம்” – விஜய் vs விஜய் சேதுபதி

நடிகர் விஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த தித்திப்பான முத்தத்தோடு நிறைவடைந்தது ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் இருவரது ரசிகர்களும் ‘மாஸ்டர்’ படம் குறித்தும், இருவரது நட்பு பற்றியும் புகழ்ந்து பேசி வருகின்றனர். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்க்கு முத்தம் கொடுக்கும் விஜய் சேதுபதி

தனது ரசிகர்களை கட்டியணைத்து முத்தம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் விஜய் சேதுபதி. இவரின் முத்தம் சினிமா ரசிகர்களையும் கடந்து அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதியிடம் தனக்கும் ஒரு அன்பு முத்தம் தருமாறு விஜய் கேட்டதாக தகவல் வெளியானது. இது உண்மைதான் என்பதை விஜய்க்கு முத்தம் கொடுத்து தீர்த்து வைத்துள்ளார் விஜய் சேதுபதி..

படப்பிடிப்பின் இறுதி நாளில் விஜய்யை முத்தமிட்ட விஜய் சேதுபதி அதனை புகைப்படம் எடுத்து வெளியிடுமாறு படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார். இதன்படி அந்த புகைப்படத்தை மாஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது அந்த புகைப்படம் இணையத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது.

What do you think?

ஈழத்தமிழர் இனப்படுகொலை; ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும்! – வைகோ

மாதவரம் தீவிபத்து; 2வது நாளாக தொடரும் போராட்டம்