கோவை ரசிகரின் செயலால் திகைத்த விஜய்..! “தவெக கருத்தரங்கு கூட்டம்..”
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் கட்சி மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டம், ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. இந்நிலையில் தவெக சார்பில் ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 27ம் தேதிகளில் கோவையில் பூத் ஏஜெண்ட் கருத்தரங்க கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் கோயம்புத்தூர் குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தவெக தலைவரும் நடிகருமான விஜய் கோவைக்கு வருகை புரிந்துள்ளார்.
Video of the DAY @TVKVijayHQ 💪🔥#CBEWelcomesTHALAPATHY pic.twitter.com/7woXX2uMaz
— TVK Vijay Trends (@TVKVijayTrends) April 26, 2025
அங்கு அவருக்கு தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த முகவர்கள் கூட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய 7 மாவட்டத்தை சேர்ந்த 16 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாக்குசாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாளில் 10 மாவட்டங்களை சேர்ந்த கழக வாக்குச்சாவடி முகவர்களும், இரண்டாம் நாளில் 13 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்க வேண்டும் என முன்னதாகவே அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும் இந்தக் கருத்தரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்டு. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் வந்தடைந்த அக்கட்சியின் தலைவர் விஜய், விமான நிலையத்தில் இருந்தே ரோடு ஷோ நடத்தி வருகிறார். அவரை காண்பதற்காகவே திரளான கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் அங்கு சூழ்ந்துள்ளனர். இதனால் ஒரு சில பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரசிகர் ஒருவர்., அவரது பிரச்சார வாகனத்தின் மீது ஏறி கத்தி., விஜயுடன் கை குலுக்கியுள்ளார். ரசிகரின் இந்த செயலால்.. விஜய் மட்டுமின்றி அங்கிருந்த பலரும் திகைத்து நின்றனர்.
தன் தலைவனை பார்த்த அந்த சந்தோஷத்தில் TVK தொண்டன்👌👌
வேறு யாரும் தவறாக பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத் தான் Y security #CBEWelcomesTHALAPATHY pic.twitter.com/uHqWsYOjFI
— Arivudainambi TVK (@Arivudainambi_) April 26, 2025