‘மக்களை அடைக்கக்கூடாது’ மாஸ்டர் விழாவில் CAA, NRC, NPR குறித்து பேசிய விஜய்!

மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் CAA, NRC மற்றும் NPR சட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் வைத்து நடைப்பெற்றது. எப்போதும் விஜய் தன்னுடைய திரைப்பட விழா மேடையில் குட்டி கதை மூலம் அரசியல் பேசுவார் இதனால் விஜய்யின் பேச்சை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

அந்தவகையில் நேற்று விழாவில் நடிகர் விஜய் CAA, NRC ,NPR சட்டங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் , ‘மக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக்கூடாது’ என்று அதிரடியாக கூறியுள்ளார். ஆனால் இந்த காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

‘கொரோனா வைரஸ்’ இத்தாலியில் ஒரே நாளில் 368 பேர் பலி!

‘இஸ்லாமியர்கள் வாக்களிக்காமல் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா?’ அமைச்சர்களிடம் வாக்குவாதம் செய்த பெண்!