‘இயக்குனராக மாறிய விஜய், நடிகர்களாக மாறிய இயக்குனர்கள்’ மாஸ்டரில் மற்றுமொரு சுவாரசியம்!

விஜய் மற்றும் விஐய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ஆடை படப்புகழ் ரத்னகுமார் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் விஜய் பாடிய குட்டி ஸ்டாரி பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஐய் இந்த படத்தில் சில காட்சிகளை இயக்கியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆம், இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளதாகவும் அந்த காட்சியை விஜய், கேமரா, ஆக்‌ஷன் சொல்லி டைரக்டு செய்ததாக கூறப்படுகிறது.

ஒரு நாள் முழுவதும் விஜய் இயக்குனர் இருக்கையில் அமர்ந்து இந்த காட்சியை படமாக்கியதாகவும், 2 இயக்குனர்களுக்கும் நடிப்பு சொல்லி கொடுத்ததோடு கேமரா கோணத்தையும் பார்த்து விஜய் சிறப்பாக அந்த காட்சியை டைரக்டு செய்ததாகவும் அப்போது படக்குழுவினர் கைதட்டி ரசித்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

What do you think?

மாசிமக விழா; புனித நீராடிய பக்தர்கள்

பெண்களுக்கான சமத்துவத்தை பெறுகின்ற நிலையை உருவாக்க வேண்டும் – வைகோ