விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பிரியங்கா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி அவர் விருது விழாக்கள், இசை வெளியீட்டு விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்குவது அவரின் முக்கிய பணிகள் ஆகும்.
விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து பிரியங்கா திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது. பிரியங்கா முதலில் அதுகுறித்து எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்து வந்தார். பின்னரே சில இடங்களில் தனது இரண்டாவது திருமணம் குறித்தும், தனது தாயார் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பிரியங்காவிற்கு இன்று இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. டிஜேவான வசி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பிரியங்கா, “என் வாழ்க்கையின் சூரிய அஸ்தமனத்தை நோக்கி இவருடன் செல்கிறேன்” என்று கூறியுள்ளார் . இதையடுத்து, சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.