“அரசு அனுமதி கொடுத்த பின்னரே மக்களைச் சென்று விஜய் சந்தித்தார்…” அமைச்சர் கே.என்.நேரு பேட்டி…!!
மத்திய அரசு அனுமதி வழங்காமல் கடன் வாங்க முடியாது வாங்கும் கடனை திருப்பி செலுத்தும் திறன் இருந்தால் மட்டுமே கடன் வாங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கும் என நெல்லையில் நகர்ப்புற நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பேட்டி.
நெல்லை மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார் அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக நகர்ப்புற நிர்வாக துறை அமைச்சரும் திருநெல்வேலி வளர்ச்சி திட்ட பொறுப்பு அமைச்சருமான கே என் நேரு, நேரில் ஆய்வு செய்தார் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான இடத்தை ஆய்வு செய்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் ஆறாம் தேதி மதியம் 11 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் வருகை தரவுள்ளதாக தெரிவித்தார்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை விஜய் சந்திக்க சென்றது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இந்த மைதானத்தின் நீளம் அகலம் குறித்து என்னிடம் கேளுங்கள்., அரசு அனுமதி கொடுத்த பின்னரே மக்களைச் சென்று விஜய் சந்தித்தார். நகர்ப்புற பகுதிகளில் தாமதமாக வரி செலுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவது தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு அதற்கான தீர்வு விரைவில் காணப்படும்.
மத்திய அரசு அனுமதித்தால் மட்டுமே மாநில அரசு கடன் வாங்க முடியும். கடனை வாங்கி திருப்பி கட்டுவதற்கான திறன் இருந்தால் மட்டுமே கடன் வாங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கும் ஒரு மணி நேரம் செய்தியாளர்களை சந்தித்து நிதி அமைச்சர் கடன் சுமையில் தமிழக அரசு இருக்கிறது என எதிர் கட்சித் தலைவர் தெரிவித்ததற்கு விளக்கத்தினை அளித்துள்ளார்.
தமிழக அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து கொண்டு வருவதால் செலவாகிறது வரவு வருவதால் அதனை மீண்டும் கட்டி வருகிறது. நெல்லை மாநகர பகுதிகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள் வாடகைக்கு செல்லாமல் இருப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாடகையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஏலம் விடும் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..