தமிழகத்தில் மேலும் 2 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம்!

தமிழகத்தில் மேலும் 2 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது வரை 249 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரசினால் 5 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் மேலும் தமிழகத்தில் மேலும் 2 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, நெல்லை, திருவாரூர், தேனி மற்றும் சேலத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ள நிலையில் மேலும் கோவை மற்றும் சென்னையில் 2 கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், கொரோனா பரவலைத்த தடுக்க விடுமுறை அறிவித்த பிறகும் வெளி இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. தேவையற்ற பயணத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

What do you think?

தமிழக எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன!

‘பார்ட்டி TO பாராளுமன்றம்’ கொரோனா பீதியில் இந்தியாவின் VIPக்கள்!