வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை! – விஜயபாஸ்கர் எச்சரிக்கை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அரசால் அறிவுறுத்தப்பட்டவர்கள், வெளியே நடமாடி வருவது சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளதாக கூறியுள்ளார்.

தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டவர்களின் பட்டியலை மாவட்ட ஆட்சியருக்கும் காவல்துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அரசின் அறிவுறுத்தலை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 2 பேர் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

துபாய், கலிபோர்னியாவில் இருந்து திரும்பியவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாகவும், இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

What do you think?

கொரோனாவுக்கு மத்திய அரசு பரிந்துரைந்துள்ள மருந்து!

‘FEFSI தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சூர்யாவின் குடும்பம்’ அதுவும் இத்தனை கோடியா?