விஜயின் கோட் ரிலீஸ் டேட்..!! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அந்த டபுள் ட்ரீட்..?
தளபதி விஜயின் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு திருவிழா என்று சொல்லலாம்.., அவர் படங்களுக்கு மட்டுமா அவர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானலே அன்று பலரின் வாட்ஸ் அப் டிபி, மற்றும் ஸ்டேட்டஸ் என அன்றைய நாளின் இணையதள ட்ரெண்ட்டே தளபதி விஜய் தான்.
இந்நிலையில், தற்போது செப்டம்பர் மாதத்தை தளபதி விஜய் தனது கோட் படத்திற்காக பிடித்து வைத்துள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய், டாப் ஸ்டார் பிரசாந்த், நடனப் புயல் பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா அஜ்மல் மற்றும் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் இறுதிக்கட்ட படபிடிப்பை நெருங்கியுள்ளது.
தற்போது இந்த படத்தை எப்போது திரையில் பார்ப்போம் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு உற்சாகத்தை கொடுத்துள்ளதோ அதே அளவிற்கு இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
தளபதி சிங்கிள் ஆக நடித்தால் மாஸ் என சொல்லுவாங்க., அதுவும் அழகிய தமிழ் மகன், மெர்சல், பிகில் போன்ற படங்கள் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார்.., அதன் பின் வந்த படங்களில் சிங்கிள் கேரக்டர் என்றாலும் ரசிகர்களிடம் பெரும் டபுள் ஆக்ஷன் எதிர்ப்பு தொடங்கியது.
எனவே இந்த படத்தில் தளபதி விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அதாவது அப்பா மகன் கதாபாத்திரத்தில்.
இந்நிலையில் படம் வெளியான நான்கு வாரம் கழித்து அதாவது செப்டம்பர் 5ம் தேதி திரையில் வெளியிடப்பட்ட பின் அக்டோபர் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் தென்னிந்திய ஓடிடி உரிமத்தை நெட்ப்ளிக்ஸ் 125 கோடிக்கு வாங்கி இருப்பது குறிப்பிட தக்கது. மேலும், இந்த படத்தின் இந்தி டிஜிட்டல் ரைட்ஸ் தனியாக இன்னொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய போவதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஆயுத பூஜைக்கு விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியானது. இந்த ஆண்டு ஆயுத பூஜையை ரஜினிகாந்தின் வேட்டையன் படம் புக் செய்துள்ளது. அதேபோல ஆயுதபூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு ஓடிடியில் கோட் படம் வெளியாக போகிறது. இது ரசிகர்களுக்கு ஒரு டபுள் ட்ரீட் என்று சொல்லலாம்.