நீட் குறித்து விஜய் கருத்து..! வரவேற்கும் 3 கட்சிகள்..!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்து தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு “கல்வி விருது விழா” இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.
விழாவின் துவக்கத்தில் பேசிய நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான “தளபதி விஜய்” ஒன்றிய அரசை தாக்கியும், நீட் குறித்தும் பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு திமுக, காங்கிரஸ் மற்றும் அதிமுக கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளனர்.. அதில் அவர் பேசியதாவது..
1975ம் ஆண்டுக்கு முன் வரை கல்வி மாநில பட்டியலில் மட்டும் தான் இருந்தது. உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான் அது.. “ஒன்றிய அரசு வந்ததுக்கு அப்புறம் அது பொது பட்டியல் சேர்ந்தது” எனக்கு தெரிஞ்சு அதுதான் முதல் பிரச்சினையா நாம் பார்க்கணும்..
இரண்டாவது, பிரச்சனை என்பது ஒரே நாடு ஒரே பாடத் திட்டங்கள் ஒரே தேர்வு அதை அடிப்படையாக வைத்து தான் கல்வி கற்கும் நோக்கத்திற்கே ஒரு எதிரான ஒரு விஷயமாக நான் பார்க்கிறேன்.,
ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்றவாறு அந்த பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். அதை “நான் மாநில உரிமைகளுக்காக மட்டுமே கேட்கவில்லை.. அந்த கல்வி முறையை பல்வேறு கண்ணோட்டங்கள் பார்க்கிறேன்.
இதில் பன்முகத்தன்மை என்பது அது ஒரு பலமே தவிர பலவீனம் என சொல்ல முடியாது. இன்னொரு ஒரு முக்கியமான ஒரு விஷயம்.. மாநில மொழியில் படிச்சிட்டு ஸ்டேட் சிலபஸ்ல படிச்சிட்டு.. என்சிஇஆர்டி சிலபஸ்ல வந்து தேர்வு வச்சா அது எப்படி..?
கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்ததன் காரணமாக.. நம்பகத் தன்மையே போய்விட்டது.. அதற்கு “நீட் விலக்கு” மட்டும் தான் தீர்வு.. அதற்காக தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை நான் மனதார வரவேற்கிறேன்.
மாநிலப் பட்டியலுக்கு மாற்றம் :
கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும்.. இல்லையேல் சிறப்பு பொது பட்டியலை உருவாக்கி அதுல கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான “விஜய்” கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவரின் இந்த கருத்துக்கு திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சியினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
அது தொடர்பாக பேசிய திமுக அமைப்பு செயலாளரான ஆர்எஸ் பாரதி, “இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக பேசி வருகிறது. நடிகர் விஜய் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அவரின் கருத்து வரவேற்க தக்கது. நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை ஒட்டுமொத்த தமிழர்களும் ஆதரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற விஜயின் கருத்து வரவேற்கத்தக்கது.
நீட் தேர்வுக்கு எதிராக ஒரு காலத்தில் திமுக மட்டுமே பேசிக் கொண்டிருந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது என ஆர்எஸ் பாரதி கூறியுள்ளார்.
அதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் எம்எல்ஏவும் ஆன செல்வபெருந்தகை. “நீட் விலக்கு குறித்து விஜய் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற விஜயின் கருத்தை நாங்கள் பாராட்டுகிறோம். அவரது கருத்தை நாங்கள் வரவேற்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
இதே போல அதிமுக தரப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “நடிகர் விஜயின் நீட் தேர்வு குறித்த கருத்து வரவேற்கத்தக்கது”. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு ” என கூறியுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..