Madhimugam
Exclusive Today Trending அரசியல் இந்தியா தமிழ்நாடு

விளைபொருட்களுக்கு குறைந்த அளவு ஆதரவு விலை அறிவித்திருப்பதாக வைகோ கேள்வி

22 விளைபொருட்களுக்கு அரசு குறைந்த அளவு ஆதரவு விலை அறிவித்திருப்பதாக, மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

மாநிலங்களவையில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் விளக்கத்தை கேட்டு வைகோ சில கேள்விகளை முன்வைத்தார். அதன்படி அரிசி, கோதுமை, பருப்பு விவசாயத்திற்கு அரசு ஏதேனும் ஊக்கத்தொகை அறிவித்து இருக்கின்றதா? என அவர் கேட்டிருந்தார். கடந்த 4 ஆண்டுகளில் அளித்த ஊக்கத்தொகை விவரங்களையும் தர வேண்டும் என வினவியிருந்த வைகோ, ஊக்கத்தொகை குறித்துத் தீர்மானிக்கின்றபோது, விளைவிப்பதற்கான செலவுடன் 50 விழுக்காடு கூடுதலாகச் சேர்த்துத் தர வேண்டும் என சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்பட்டதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், 22 விளைபொருட்களுக்கு அரசு குறைந்த அளவு ஆதரவு விலை அறிவித்து இருப்பதாக கூறியுள்ளார். மாநில அரசுகள், நடுவண் அமைச்சகங்கள், அரசுத்துறைகள் அளித்து இருக்கின்ற பரிந்துரைகளின் அனைத்துக் கூறுகளையும் ஆராய்ந்து, விவசாயச் செலவுகள் மற்றும் விளைபொருட்களின் சந்தை மதிப்பு ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளின்படி, கரும்புக்கு உரிய விலை அறிவிக்கப்பட்டு இருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அரிசி, சோளம், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, துவரம் பருப்பு, பயத்தம்பருப்பு, உளுந்து, தோலுடன் கூடிய நிலக்கடலை, சோயா பீன், சூரியகாந்தி, எள், நைஜர் விதைகள், பருத்தி, ஆறு வகை ரபி பயிர்களான கோதுமை, பார்லி, கொள்ளு, மைசூர் பருப்பு, கடுகு, குசம்பு மற்றும் இரண்டு வகை பணப்பயிர்களான சணல் மற்றும் கொப்பரை ஆகியவை குறைந்த அளவு ஆதரவு விலை பெறுகின்ற விளைபொருட்களாகும் என அவர் கூறியுள்ளார். கூடுதலாக ஒருவகை பீர்க்கை, நார் உரிக்கப்பட்ட தேங்காய் ஆகியவற்றுக்கு, கடுகு மற்றும் குசம்புக்குக் கொடுக்கப்படுகின்ற விலை தரப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு, விளைவிக்க ஆன செலவுடன் கூடுதலாக 50 விழுக்காடு தர வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2018-2019 நிதி நிலை அறிக்கையில், குறைந்த அளவு ஆதரவு விலை என்ற முன் தீர்மானிக்கப்பட்ட கொள்கையை அறிவித்து இருப்பதாகவும், அதன்படி கட்டாயமாக கரீஃப், ரபி பணப்பயிர்களுக்கு குறைந்த அளவு ஆதரவு விலை 50 விழுக்காடு கூடுதலாகத் தரப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அந்த நடைமுறை 2019-20 ஆம் ஆண்டிலும் பின்பற்றப்பட்டதாகவும் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

Related posts

குளத்திற்குள் சரிந்த 8 வீடுகள்; வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பிய அதிசயம்!

Digital Team

வருமானவரித்துறை அலுவலகத்தில் அர்ச்சனா கல்பாத்தி ஆஜர்

Digital Team

“அதிரி புதிரியாக வெளியானது மாஸ்டரின் குட்டி ஸ்டோரி”

Digital Team

சென்னை ஷாஹின்பாக், மெரினா புரட்சி போல் உருவெடுக்க வாய்ப்பு? – முதலமைச்சர் ஆலோசனை

Digital Team

டெல்லி ஜாமியா பல்கலை மாணவர்களின் பேரணியில் தள்ளுமுள்ளு

Digital Team

தனுஷ், கார்த்திக் நரேன், ஜீ.வி, சத்யஜோதி பிலிம்ஸ்; உருவானது புதிய கூட்டணி!

Digital Team
You cannot copy content of this page
Madhimugam