February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending சினிமா

‘தசாவதாரம்’ கமலுக்கு சவால் விடும் ‘கோப்ரா’ விக்ரம்!!!

’கோப்ரா’ படத்தில் 20க்கும் மேற்பட்ட தோற்றங்களில் விக்ரம் நடித்து வருவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், நடிகர்கள் சிவாஜி, கமல் ஆகியோரின் சாதானைகளை விக்ரம் முறியடிப்பார் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, தற்போது விக்ரமை வைத்து ‘கோப்ரா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மேலும், பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடித்து வருகிறார். ரசிகர்களின் அதிக எதிர்ப்பார்ப்பில் உள்ள இப்படம் வரும் மே மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் விக்ரம் 20 விதமான தோற்றங்களில் நடித்து வருவதாகவும், இதன் ஃபர்ஸ்ட்லுக் பிப்-14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விக்ரமின் பல தேற்றங்கள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

1964 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நவராத்திரி’ படத்தில் நடிகர் சிவாஜி 9 விதமான வேடங்களிலும், 2008 ஆம் ஆண்டு வெளியான ‘தசாவதாரம்’ படத்தில் 10 விதமான தோற்றங்களில் நடிகர் கமல்ஹாசனும் நடித்துள்ளனர். பலவிதமான தோற்றங்களில் நடித்து வெளிவந்த படங்களில் இவ்விரண்டு படங்கள் மட்டுமே சாதனையாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது விக்ரம் நடித்து வரும் ‘கோப்ரா’ படத்தின் மூலம் இச்சாதனைகள் முறியடிக்கப்படும் என்ற பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளன.

Related posts

சென்னையில் விரைவில் இரண்டாவது விமான நிலையம்..!

Digital Team

ஆண்களும் கருத்தடை செய்துகொள்ள வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Digital Team

2-வது நாளாக நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டம்

Digital Team

“ஓமன் நாட்டில் சிக்கித்தவிக்கும் இளைஞர்கள், விரைவில் நாடு திரும்புவர்” – வைகோ நம்பிக்கை

Digital Team

ரசிகர்களுடன் கெத்து காட்டிய விஜய் – சம்மன் அனுப்பிய வருமானவரித் துறை

Digital Team

வீடியோ எடுத்த ரசிகர்; எச்சரித்த சமந்தா

Digital Team
You cannot copy content of this page
Madhimugam