சமாதானத் திட்டத்தை நிறைவேற்றி தந்ததற்காக முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
வணிகா்களின் வரி நிலுவையை எளிய முறையில் வசூலிக்கும் சமாதானத் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் சுமாா் ஒரு லட்சம் வணிகா்களுக்கான வரி நிலுவையை ரத்து செய்து அதற்கான சான்றுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து வணிகர் சங்க பேரமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா கூறியதாவது,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோரிக்கைகளை ஏற்று
முதலமைச்சர் சமாதான திட்டத்தை நிறைவேற்றி தந்திருக்கிறார்கள். சமாதான திட்டத்தின் மூலம் முதலமைச்சர் வணிகர்களுக்கு முழுமையான தீபாவளியை கொடுத்து இருக்கிறார் என தெரிவித்தார்.
முதலமைச்சர் இன்று முக மளர்ச்சியுடன் திட்டத்தை நிறைவேற்றியது மட்டுமல்லாது அதற்கான சான்றுகளையும் வழங்கி இருக்கிறார். இதற்காக முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த இருக்கிறோம் அந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளதாக கூறினார்.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் இரண்டு லட்சம் வணிகர்கள் பயன்பெற உள்ளனர் அதன் மூலமாக அவர்கள் குடும்பத்தினரும் பயன்படுகிறார்கள் என கூறினார்.