விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் பட்டியல் இனத்தவர் கோவிலில் அனுமதிக்க முடியாது என்று கூறி வந்த விவகாரத்தில் இருதரப்பு பேச்சு வார்த்தை சுமூக முடிவு – சில தினங்களில் கோவிலுக்குள் அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்திலுள்ள தர்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் உள்ளே அனுமதிக்கமாட்டோம் என ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இரு தரப்பினரையும் அழைத்து மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மற்றொரு தரப்பினர் சம்மதம். எந்த தேதியில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்து செல்வது என்பது பிறகு தெரிவிக்கப்படும் என ஆட்சியர் பழனி பேட்டியில் தெரிவித்தார்.