வங்கதேசத்தில் தொடரும் வன்முறை..! இராணுவீரர்களுக்கு ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!
வங்கதேசத்தில் நேற்று வன்முறை ஏற்பட்டுள்ளது., அந்த வன்முறையின் நேற்று 91 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பலர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. மேலும் இந்த வன்முறைக்கான காரணம் குறித்தும் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத்திற்காக உயிரை விட்டவர்களுக்கும்., சுதந்திர போராடத்திற்காக பாடுபட்டவர்களுக்காக 30 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மேலும் அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 2018ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதன் காரணமாக இடஒதுக்கீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ள நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின் படி 30 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வர முயற்சித்து வருகிறார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர் அமைப்பினர் கடந்த மாதம் போராட்டம் நடத்தியுள்ளனர்.. அதில் வன்முறை வெடித்துள்ளது. அந்த வன்முறையில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். அதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளார்.
ஷேக் ஹசீனாவின் அந்த அழைப்பிற்கு கண்டனம் தெரிவித்து வங்கதேசம் மாணவர்கள் மீண்டும் போராட்டம் செய்துள்ளனர். தலைநகர் டாக்காவில் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி கூடிய மாணவர்கள், “ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும்.
என் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்” என்ற பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2ம் நாளாக நேற்றும் தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு எதிராக ஆளும் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால் பல இடங்களில் மாணவர்களுக்கும், அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை கலைக்க முயன்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி மாணவர்கள் தாக்கினர். பதிலுக்கு மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மேலும் டாக்காவில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கும் தீ வைக்கப்பட்டது.
பல இடங்களில் பொதுசொத்துகள் சேதமடைந்தன. நேற்று நடந்த போராட்டத்தில் 14 காவலர்கள் உள்பட 91 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் வன்முறை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..