‘வருமுன் காப்பதே சிறந்தது’ கொரோனா குறித்து கோலியின் டிவிட்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் 127 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடரும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இந்த கொரோனா வைரஸ் குறித்து தனது டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், “அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து உறுதியுடன் இந்த கொரோனாவிற்கு எதிராக போராடுவோம். பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் பொதுமக்கள் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ள அவர், மேலும் “முக்கியமாக வருமுன் காப்பதே சிறந்தது என்பதை நினைவில் கொள்வோம்.அனைவரும் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

What do you think?

கொரோனா பீதியில் மாட்டு கோமியம் குடித்த இந்து மகா சபா நிர்வாகிகள்

நான் திருநங்கை தான் – மீரா மிதுன் அதிரடி