பாரத் எனும் இந்தியாவின் மாற்றுப் பெயருக்கு இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சேவாக் ஆதரவு தெரிவித்ததற்கு நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக ஒன்று கூடியுள்ள எதிர்கட்சிகள் தங்களை இந்தியா கூட்டணி என்று அழைத்து வருகிறது. இந்த நிலையில் இதற்கு எதிர்மாறாக மத்திய அரசு இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ’ஒரு பெயர் என்பது நாம் பெருமிதம் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். உலகக் கோப்பையின் போது இந்திய அணி வீரர்கள் நெஞ்சில் ’பாரத்’ என இடம்பெற்றிருப்பதை பிசிசிஐ உறுதி செய்ய வேண்டும்’ என பதிவிட்டிருந்தார்.