“ஜனநாயகத்தின் கருத்துக்கு எதிரொலிக்கும் வாக்கு..” திரவுபதி முர்மு பதிவு…!!
78வது சுதந்திர தினமானது இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.., இதனை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. மேலும் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி பற்றியும் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்…
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இந்திய நாடானது பல்வேறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.. அதில் லட்சக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்கள் பெரும் துயரத்தை அனுபவித்தனர். அதி வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் தற்போது இந்தியா முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவை வளர்ந்த நாடாக உயர்த்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சில பொருளாதார சீர்திருத்தங்களின் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் போடப்பட்டுள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. அவர்கள் மீண்டும் அதற்கு அதற்குள் தள்ளப்படாமல் இருக்கவேண்டும்.. அதற்காக அரசு அவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல சிறப்பு திட்டங்களை செய்து வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் மகளிருக்கு உண்மையான அதிகாரம் அளிக்கும் விதமாக உள்ளது..
நாட்டின் சுதந்திரத்தின் நூற்றாண்டுக்கு வழிவகுக்கும் கால் நூற்றாண்டு காலமான அமிர்த காலம், இன்றைய இளைஞர்களால் வடிவமைக்கப்பட உள்ளது. அவர்களின் ஆற்றலும் உற்சாகமும்தான் தேசம் புதிய உயரங்களை எட்டிப்பிடிக்க உதவும்.
இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று, சிறந்த கல்வி., பாரம்பரியம் மற்றும் போதைப்பழக்கம் ஒழிப்பு மற்றும் புதிய மனநிலையை உருவாக்குவது என பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படும். இதற்காகவே, தேசிய கல்விக் கொள்கை 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
புதிய தேசிய கல்விக்கொள்கையை தொடங்கி அதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தேசிய கல்விக்கொள்கையானது மாணவர்களின் திறன் வளர்ப்பு அதிகரிப்பதோடு, இளைஞர்களுக்கான திறன், வேலைவாய்ப்பு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்குவதற்கு அரசாங்கம் முன்முயற்சிகளை முன்வைத்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள். மேலும் ஒரு கோடி இளைஞர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் முன்னணி நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்ய உள்ளனர்.
இந்திய விளையாட்டு வீரர்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்துள்ளனர். எங்கள் விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் சிறந்து விளங்கியுள்ளனர். அவர்களின் சமீபத்திய சாதனைகள் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும். இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய டி 20 உலகக் கோப்பை வெற்றி நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. செஸ் போட்டிகளில் டி குகேஷ் மற்றும் ஆர் பிரக்ஞானந்தா போன்ற இளம் வீரர்களின் சாதனைகள், சதுரங்கத்தில் இந்திய சகாப்தத்தின் புதிய விடியலைக் குறிக்கிறது. இந்திய இளைஞர்கள் பேட்மிண்டன், டென்னிஸ் மற்றும் பல்வேறு விளையாட்டுகளிலும் முன்னேறி வருகின்றனர். அவர்களின் சாதனைகள் அடுத்த தலைமுறையினருக்கும் உத்வேகம் அளித்துள்ளன.
2024 மக்களவை தேர்தலில் கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் ஓட்டுபோட தகுதி பெற்றுள்ளனர். இது வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் பயிற்சி. இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும் போது, அது ஜனநாயகத்தின் கருத்துக்கு எதிரொலிக்கும் வாக்கு. இந்தியாவின் வெற்றிகரமான தேர்தல்கள் உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துகின்றன. இன்னும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்பவர்களுக்கு, நாங்கள் ஆதரவை கொடுப்போம் என இவ்வாறே அவர் பேசியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..