‘கொரோனா அச்சம்’ மூலிகை மருந்தை உட்கொண்ட குடும்பத்தினருக்கு வாந்தி, மயக்கம்!

கொரோனா அச்சத்தால் மூலிகை மருந்தை உட்கொண்ட குடும்பத்தினர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வத்தலகுண்டு அருகே குன்னுத்துப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் – கவிதா தம்பதியர் தங்களது இளைய மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா என நினைத்து மூலிகை மருந்தை கொடுத்துள்ளனர். மேலும் தங்களுக்கும் காய்ச்சல் பரவாமல் இருக்க மற்ற குடும்பத்தினரும் மூலிகை மருந்தை உட்கொண்டனர்.

இதனால் குடும்பத்தினருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் இளைய மகனான விஸ்வா மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

What do you think?

‘கொரோனா எதிரொலி’ உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து!

கொரோனா வைரசால் சிங்கப்பூரில் முதல் பலி!