“வா மச்சானே மச்சானே..” இணையத்தில் வைரலாகும் ரித்திகா சிங் வீடியோ..!!
ரியல் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் மாதவன் நடிப்பில் சுதா இயக்கத்தில் இறுதிச்சுற்று படத்தில் நாயகியாக நடித்து இருந்தார்.
அந்த படத்தில் குத்திச்சண்டை வீராங்கணையாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதையடுத்து பல படங்களில் நடித்தவர் சமீபத்தில் ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த வேட்டையன் படத்தில் காவல்துரை அதிகாரியாக நடித்து இருந்தார்.
அதோடு ஆக்சன் காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில், பெண்களின் பாதுகாப்பு குறித்த ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில், யாராவது உங்களை தாக்க வரும்போது முதலில் அவர்களின் தாக்குதலை தடுக்க வேண்டும். அதையடுத்து அவர்களது வயிற்றிலும் கழுத்திலும் மாறி மாறி குத்த வேண்டும்.
பின்னர் வலதுபுறக் கழுத்தில் குத்தினால் நம்மை தாக்கும் எதிரி செயல் இழந்து விடுவார் என்று கூறி வேட்டையன் ஹூக் என்று பெயர் வைத்து இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் ரித்திகா சிங்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..