சீதை மீது ராமன் சந்தேகித்தது சரியா..? சீதையின் உருவத்தில் இருப்பது இவரா..!!
மனிதர்களுக்குள் மட்டும் தான் பிரச்சனை என நாம் கஷ்டம் வரும் நேரங்களில் தெய்வத்திடம் சென்று முறையிடுவதை வழக்கமாக வைத்து இருப்போம்.. ஆனால் தெய்வத்திற்குள்ளும் சண்டைகள் இருக்கிறது என எத்தனை பேருக்கு தெரியும்..?
நேற்று இரவு தான் ராமன் சீதை கதை பற்றி படித்தேன் அதை படித்த பின்னரே பல சந்தேகங்கள் எழுந்தது.. என்னுடைய கேள்விகள் சரியா..? தவறா..? என நீங்களே சொல்லுங்க.
அசோக வனத்தில் இருந்து சீதையை மீட்ட ராமன் சீதையின். அவருடை கற்பை சோதிக்க அக்னி பரீட்சை ஒன்றை வைப்பார். கணவனின் உத்தரவை ஏற்றுக்கொண்ட சீதை அந்த அக்கினியில் இறங்கி தான் தப்பு செய்யவில்லை என நிரூபிப்பார்.. அனைவரும் துக்கத்தில் மூழ்கியிருக்கும் போது, நெருப்பிலிருந்து சீதை வெளியே வருவார். கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு சீதை வெளியே வருவார். அதாவது இரண்டு சீதை’கள் நெருப்பிலிருந்து வெளியே வருவார்கள்.
அது அங்கிருந்த அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது ., ராமன், லட்சுமணன் இருவரும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்து நின்ற போது நாரதர் அங்கே வந்து “ராமா நீங்கள் வனவாசத்தில் இருந்தபோது வேதவதி என்ற பெண் உன் மீது அளவு கடந்த பக்தி வைத்திருந்தார். அந்த சமயத்தில் இராவணன் சீதையை கடத்திக்கொண்டு போக வந்தான்., அதனை அறிந்து கொண்ட வேதவதி.. சீதையின் உருவம் எடுத்து குடிசையில் இடம் பெயர்ந்தாள்,
அப்போது அங்கு சென்ற ராவணன்., வேதவதியை சீதை என நினைத்து தூக்கிட்டு போனதாக உண்மையை சொல்லுவார்..
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமர், என்னது இந்த பத்து மாத காலங்களும் அசோக வனத்தில் இருந்தது சீதை வடிவில் இருந்த வேதவதியா…? என கேட்கிறார்.
சீதையாக இருந்த வேதவதி உருமாறி, “ஆமாம் சுவாமி, சீதையாக அசோகவனத்தில் இருந்தது நான் தான்…” என சொல்கிறாள்..
இதனை கேட்டு மெய் சிலிர்த்த ராமர், கடந்த “பத்து மாதங்களில் பல துயரங்களை சந்தித்த வேதவதியே உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்..? என கேட்க. அதற்கு வேதவதி, உங்களையே நினைத்து உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கும் நான் உங்களை திருமணம் செய்துக்கொள்ளும் வரத்தை எனக்கு கொடுங்கள் என கேட்கிறார்..
இதனை கேட்ட ராமர், நான் இந்த பிறவியில் ஏக பத்தினி விரதனாக இருப்பதால், இந்த ஜென்மத்தில் உன்னை திருமணம் செய்துக்கொள்ள முடியாது., ஆனால் நீ என்னிடம் கேட்ட வரங்களை உனக்கு அளிக்க வேண்டும்.., அடுத்த ஜென்மத்தில் நான் சீனிவாசன் பெருமாளாக பிறந்து உன்னை திருமணம் செய்துக்கொள்வேன் என உறுதி அளிப்பார்..
அதன்படி, விஷ்ணு வெங்கடாசலபதியாக பூமியில் அவதாரம் எடுக்கிறார். வேதவதி ஆகாசராஜன் என்ற மன்னனுக்கு பத்மாவதியாக பிறக்கிறார். வெங்கடாசலபதிக்கும்(விஷ்ணு) பத்மாவதிக்கும் திருமணம் நடந்து முடிகிறது. இருவரும் ஆனந்தமாக ஒரு பூங்காவனத்தில் நாட்களை கழிக்கின்றனர்.
அந்த சமயத்தில் மகாலட்சுமி தன்னுடைய கணவரான விஷ்ணுவை பார்ப்பதற்காக பூங்காவனத்திற்கு வருகிறார்.. அப்போது அவருக்கு பல உண்மைகள் தெரியவரும் அதாவது விஷ்ணு மகாலட்சுமிக்கு தெரியாமல் பத்மாவதி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்வதை பார்க்கிறார்..
விஷ்ணுவிடம் தன்னுடைய கோபத்தை காட்டிய மகாலட்சுமி, பத்மாவதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்.. இந்த வாக்குவாதத்தை தீர்க்க முடியாத வெங்கடாசலபதி கோவத்தில் சிலையாகி மாறி விடுகிறார். அப்படி அவர் சிலையாக மாறி நின்ற இடம் தான் தற்போது ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் என புராண கதைகளில் சொல்லப்பட்டுள்ளது..
இதில் தான் எனக்கு சில கேள்விகள் . சீதை வேடத்தில் இருந்தது வேதவதி எனவும் அவளை தான் ராவணன் தூக்கிக்கொண்டு சென்றான் எனவும் கதை சொல்லுகிறது., அப்படி என்றால் அந்த பத்து மாதங்களும் நிஜ சீதை எங்கே இருந்தார்… அதை ஏன் கதைகள் சொல்லவில்லை.
தன்னுடைய உண்மையான மனைவி யாரென அறியாதவ கடவுள் ஏன் மனைவியின் மீது சந்தேகம் கொள்ள வேண்டும்..? சீதை மீது ராமன் சந்தேகித்தது சரியா..? இந்த கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்க… இல்லை என்றால் அடுத்த களத்தில் மதிமுகமில் படிப்போம்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..