நெத்திலி கருவாடு தொக்கு..!
தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு 100 கிராம்
வெங்காயம் 2
தக்காளி 2
மஞ்சள்தூள் கால் ஸ்பூன்
கடுகு அரை ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
சாம்பார் பொடி 1 ஸ்பூன்
பூண்டு 4 பற்கள்
செய்முறை:
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து கொள்ளவும்.
பின் பூண்டு, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
நெத்திலி கருவாடை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதில் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், சாம்பார் தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
இதில் கொஞ்சம் நீர் சேர்த்து கலந்து விட்டு கொதிக்கவைக்க வேண்டும்.
குழம்பு நன்றாக கொதித்து சுண்டியதும் கடைசியாக கொத்தமல்லி இலை தூவி கிளறிவிட்டு இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் வீடே கமகமவென நெத்திலி கருவாடு தொக்கு ரெடி.