கொய்யா இலை ஹேர்பேக்..! பயன்படுத்தி பாருங்க அப்பறம் நீங்ளே அசந்து போய்டுவீங்க..!
தலைமுடி உதிர்விற்கு பல காரணங்கள் இருக்கிறது. தலைமுடி உதிர்வால் பலரும் மனஉலைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
உதாரணமாக ஹார்மோன் சமநிலையில் இல்லாமல் இருப்பது, பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்சனை, முடியில் அதிகமான கெமிக்கல் பயன்படுத்துவது என இந்த தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை சொல்லலாம்.
கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் எனவே அதை நம் உணவில் பயன்படித்துவது மிகவும் நல்லது. அப்படியான சத்துக்கள் நிறைந்திருக்கும் கொய்யா இலையை வைத்து இன்று நாம் சிம்பலான ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
கொய்யா இலையை நன்கு தண்ணீரில் சுத்தமாக கழுவி அதை கட்டியாக அரைத்து முடியில் தடவுங்கள். 20 நிமிடம் ஊறியதும் தலை முடியை அலசிவிடுங்கள். இது முடியின் வேர்களை உறுதியாக்குவது மட்டுமில்லாமல் தலைமுடி உதிர்வையும் கட்டுப்படுத்துகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் தலைமுடி உதிர்வு பிரச்சனை இருக்காது.
தேவையான பொருட்கள்:
கொய்யா இலை – 1 கைப்பிடி
முட்டை – 1 (வெள்ளை கரு)
கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
கொய்யா இலை ஹேர் பேக் தயார் செய்ய ஒரு கைப்பிடி கொய்யா இலையை நீரில் கழுவி சுத்தம் செய்த பின் மிக்சி ஜாரில் போட்டு கொள்ளவும். பின்னர் அதோடு ஒரு முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து போட்டு கொள்ள வேண்டும். மேலும் அத்துடன் 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி நன்றாக கட்டியான பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.
பிறகு நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த ஹேர் பேக்கை நம் கூந்தல் முழுவதும் அப்ளை செய்த பின் ஒரு 30 நிமிடங்கள் கழித்து ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை கலசிக்கொள்ள வேண்டும்.
இந்த ஹேர்பேக்கை வாரத்தில் ஒரு முறை என்ற வீதம் 2 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புதிதாக முடி வளருவதுடன் அடர்த்தியாகவும் முடி கருமையாகவும் இருக்கும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.