‘6வது நாளாக தொடரும் கேன் உரிமையாளர்களின் போராட்டம்’ சென்னையில் குடிநீருக்கு தட்டுப்பாடு?

குடிநீர் கேன் உரிமையாளர்கள் தொடர்ந்து 6வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் இயங்கி வருகின்றன. சென்னையில் பலரும் குடிநீருக்காக கேன் வாட்டரை தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் குடிநீர் ஆலைகளின் மூலம் குடிநீர் கேன் உரிமையாளர்கள் நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சுவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், “உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டது.

இதையடுத்து குடிநீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.உரிமையாளர்கள் உரிமம் பெறுவதற்கான வழி வகைகளை அரசு உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.கடந்த 6 நாள்களாக இந்த வாட்டர் கேன் உரிமையாளர்களின் போராட்டம் நீடித்து வருவதால் சென்னையில் பல இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த குடிநீர் கேனின் விலையும் கடுமையாக உயரும் என்றும் கூறப்படுகிறது.

What do you think?

‘அரசியலுக்காக குத்துசண்டை’ சல்பேட்டாவின் கதை!

CAA, NRC, NPR-க்கு எதிராக கோவையில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்திய மனிதநேய ஜனநாயக கட்சி!