தர்பூசணி வாங்கும்போது இதையெல்லாம் கவனிங்க…!!
தர்பூசணி வாங்கும் போது அந்த பழம் சீரான வடிவத்தில் வளர்ந்திருக்க வேண்டும். சமச்சீரற்ற தோற்றத்தில் வளர்ந்திருந்தால் அதை வாங்கக் கூடாது. அந்த பழம் சுவையில் குறைவாக இருக்கும்.
நன்றாக பழுத்த தர்பூசணி பொதுவாக அடர்ந்த பச்சை நிறத்தில் மேலும் அடர் கோடுகள் மற்றும் புள்ளிகளுடன் காணப்படும். வெளிறிய நிறத்தில் இருக்கும் பழங்களை தவிர்க்க வேண்டும்.
தர்பூசணியை நம் உள்ளங்கை வைத்து தட்டிப்பார்க்க வேண்டும். அப்படி தட்டும்போது டிரம் ஒலியை எதிரொலிக்கும், அது நல்ல பழம் சாப்பிட அருமையாக இருக்கும்.
தர்பூசணியை தூக்கி பார்க்கும்போது அது நன்றாக கடினமாக இருந்தால் அது நன்றாக பழுத்து இருக்கும். சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
தர்பூசணி செடி வகையை சேர்ந்தது என்பதால் அதன் அடிப்பகுதியை பார்க்க வேண்டும். நன்றாக பழுத்த பழத்தில் மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் காணப்படும்.
இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து ஒரு தர்பூசணி வாங்கும்போது அது சாப்பிட சுவையாகவும் தண்ணீர் நிறைந்தாகவும் இருக்கும். தர்பூசணியை அதன் சீசனில் வாங்கி சாப்பிடுங்கள். தர்பூசணி மட்டுமில்லை எல்லாப் பழங்களையும் அதனுடைய சீசனில் வாங்கி சாப்பிடும்போது அது சுவையாக இருக்கும்.