ADVERTISEMENT
தர்பூசணியை ஃபிரிட்ஜில் வைப்பதால் நடப்பது என்ன..?? பார்க்கலாம் வாங்க..
கோடை காலத்தின் முன்னோட்டமாக வெப்பம் உக்கிரமாக அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் உடல் சூட்டிற்கு ஆளாகாமல் உடலை நீரோட்டமாக வைத்திருப்பது மிக முக்கியம்.
இதற்கு நிறைய தண்ணீர் குடிப்பது தான் நீரோட்டத்தை தக்கவைக்க சிறந்த வழி எனவே தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். மாற்றாக நீரோட்டம் அதிகம் நிறைந்த பழங்கள் உட்கொள்ள வேண்டும், அந்த வரிசையில் தர்பூசணி பழத்தை சாப்பிடுவதில் கூடுதல் நன்மை கிடைக்கும். காரணம் தர்ப்பூசணியில் 92 சதவீதம் நீர் நிறைந்திருக்கிறது. இது உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நீரிழப்பையும் தடுக்கிறது.
தர்ப்பூசணியில் லைகோபீன், ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் ஏ,சி, பொட்டாசியம் மற்றும் அமினோ அமிலங்கள் ஆகியவை அதிகம் இருக்கிறது.
தர்ப்பூசணியில் கலோரி குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க விருப்பம் இருப்பவர்களுக்கும் இது பயன்படும். இந்த பழத்தை உண்டால் பசியும் குறையும். நீண்ட நேரம் வயிறு நிறைந்திருப்பது போல இருக்கும்.
நிறைய பேர் தர்ப்பூசணி பழத்தை சின்ன பீசாக நறுக்கி பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிட்டால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைவதற்கு வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதனை கண்டறிய அமெரிக்க வேளாண்மைத்துறை நடத்திய ஆய்வில் வெப்பநிலையில் வைத்திருக்கும் தர்பூசணியை விட, குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் தர்பூசணியில் சத்துக்கள் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.