வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கடன் தள்ளுபடி.. கேரளா வங்கி அதிரடி முடிவு..!
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30 தேதி பெய்த அதிக கனமழை காரணமாக 3 கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டு 400க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர்.
அதுமட்டுமல்லாமல் 600க்கும் மேற்ப்பட்டோர் வீடு வாசல்களை இழந்து செய்வதறியாமல் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் முன்வந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், கேரள அரசு பாதிக்கப்பட்ட மக்களின் முழு வங்கி கடனையும் தள்ளுபடி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சுரல்மாலா கிளையில் கடன் பெற்று இறந்தவர்கள் மற்றும் குடியிருக்கும் வீடுகளை இழந்தவர்களின் முழு கடன்களையும் தள்ளுபடி செய்வதாக வங்கி நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கேரள வங்கி, முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 2லட்சத்தை வழங்கியுள்ளது. இதனைதொடர்ந்து கேரள வங்கி ஊழியர்கள் தங்களின் 5 நாள் சம்பளத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய உதவியை வங்கி கிளையும் ஊழியர்களும் செய்ய இருப்பதை அறிந்த கேரள மக்கள் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்