வயநாடு நிலச்சரிவு.. அதிகரிக்கும் உயிர் பலி எண்ணிக்கை..!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் வாழும் மக்கள் மண்ணில் புதையுண்டனர்.
நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட மக்களை நவீன கருவிகளின் உதவியுடன் தொடர்ந்து 6-ஆவது நாளாக தேடும் பணி திவீரமாக நடைபெற்று வருகிறது. வீடு, பொருள்கள், உறவினர்கள் என அனைத்தையும் இழந்து செய்வதரியாமல் பாதிக்கப்பட்டவர்கள் நிற்கின்றன.
இந்தநிலையில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 344-ஆக இருந்த நிலையில் தற்போது 357-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்