வயநாடு நிலச்சரிவு… அதிகரிக்கிறதா பலி எண்ணிக்கை.. ரேடார் கருவி..!
கேரளாவில் கடந்த 30ம் தேதி பெய்த தொடர் கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிரமங்களான முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.இதனால் பாறைகள், மண் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து வரப்பட்டன.
மலைகளில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு என்பது முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதியை வேறொடு அழித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 344க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350ஆக அதிகரித்துள்ளது. மேலும், 200க்கும் மேற்பட்டோர் தற்போதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முண்டகையில் நேற்று ரேடார் ஸ்கேனர் இடிபாடுகளுக்கு அடியில் உயிர்கள் இருப்பதைக் கண்டறிந்ததையடுத்து, அங்கே கடுமையான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
பலமணி நேரமாக நடத்திய தேடுதல் பணியில் ஆம்புலன்ஸ்கள் ரெடியாக வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் தேடுதலை மேற்கொண்ட நிபுணர், சேற்றின் அடியில் மனிதனோ, விலங்குகள் போன்ற உயிர்கள் இல்லை என்று உறுதிப்படுத்தினர். மேலும் ஸ்கேனர் தவளை அல்லது பாம்பு இருப்பதை கண்டறிந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்