வயநாடு நிலச்சரிவு… கைக்கூப்பி இரங்கல் தெரிவித்த மனுசூர் அலிகான்..!
கேரளாவில் கடந்த 30ம் தேதி பெய்த தொடர் கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிரமங்களான முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் பாறைகள், மண் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து வரப்பட்டன.மலைகளில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு என்பது முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதியை வேறொடு அழித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்னும் சில பேரின் நிலமை என்னவென்றே தெரியவில்லை. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் வாழ்வதாரங்களை இழந்துள்ள சூழலில் மீட்பு படையிணர் அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர்.
இதிலிருந்து மீண்டுவருவதற்காக பல தரப்ப்புகளில் இருந்து உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் மனுசர் அலிகான் இந்த கோர நிலச்சரிவு குறித்து இரங்கள் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளார்.
அந்த வீடியாவில் வயநாடு.. ஜாதி, மதம் இனம், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், சீக்கியன், பவுத்தன், கீழ் ஜாதி, மேல் ஜாதி, உயர்ந்தவன், தாழ்ந்தவன், சினிமா, அரசியல், ஆட்சியாளர்கள், அடிவருடிகள், சந்தர்ப்பவாதிகள், கல்யாணங்கள், பந்தா, பகட்டு தனம் என எதுவுமே இல்லை. இயற்கை.. இயற்கையே யாவும்.. இயற்கையே யாவும்..
நொடிப்பொழுதில் வீடுகள், உடல்கள் அடித்து செல்லப்பட்டு ஊர்கள் கிராமங்கள் கணாமல் போய் உள்ளன. பலர் மண்ணோடு மண்ணாக புதைந்து அவல நிலையில் வயநாடு மாறி உள்ளது. இது ஒரு புறம் இருக்க ராக்கெட், ஏவுகளை குண்டுகள் வீசி கட்டிடங்கள், நகரங்கள், ஊர்களை அழித்து ஒழித்து நாசமாக்கும் மனித பிண்டங்கள் ஆட்சியாளர்கள்.
மனிதம் கேள்விக்குறியில் இருக்கிறது. இயற்கையே யாவும். உயிரிழந்த வயநாடு மாமனிதர்களுக்கு என் நெஞ்சார்ந்த ஆழ்ந்த இரங்கல்கள் எனக்கூறி கைகூப்பி கண்ணீர் வடித்து இரங்கள் தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்